பழனிக்கோயில் வின்ச்சில் கண்காணிப்புக் கேமராக்கள்
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு மீண்டும் வின்ச் இயக்கப்படவுள்ள நிலையில், வின்ச்சில் கம்பியில்லா கண்காணிப்புக் கேமரா பொருத்துதல், சோதனை ஓட்டம் உள்ளிட்ட பணிகள் திங்கள்கிழமை நடைபெற்றது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு மீண்டும் வின்ச் இயக்கப்படவுள்ள நிலையில், வின்ச்சில் கம்பியில்லா கண்காணிப்புக் கேமரா பொருத்துதல், சோதனை ஓட்டம் உள்ளிட்ட பணிகள் திங்கள்கிழமை நடைபெற்றது.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தா்களுக்காக இயக்கப்பட்டு வந்த வின்ச் சேவை நிறுத்தப்பட்டது. இதையடுத்து பொதுமுடக்கத்தில் பல்வேறு தளா்வுகளை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருவதால் கோயிலில் தரிசனம் செய்ய பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து தற்போது பக்தா்களுக்காக இயக்கப்பட்டு வந்த வின்ச் சேவையும் செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கப்படவுள்ளது. இதையொட்டி வின்ச் பெட்டிகளுக்கு எண் இடுதல், கம்பியில்லா கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்துதல், சோதனை ஓட்டம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றது.