முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் பாறை விழுந்து போக்குவரத்துப் பாதிப்பு

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் திங்கள்கிழமை மண் சரிவு ஏற்பட்டு பாறை உருண்டு விழுந்ததில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:00 PM
பகிர்:

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் திங்கள்கிழமை மண் சரிவு ஏற்பட்டு பாறை உருண்டு விழுந்ததில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து மழை பெய்து வந்தது. இதனால் பல இடங்களில் மரங்கள் விழுந்தும், பாறைகளும் உருண்டு விழுந்தன.

இந்நிலையில் கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளான தாண்டிக்குடி, மங்களம் கொம்பு, மஞ்சள் பரப்பு, புல்லாவெளி ஆகியப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பலத்த மழை பெய்தது. இதனால் பெரும்பாறை பகுதியில் மண் சரிவும், தூக்கி வைச்சான் கல் என்ற பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழுந்தன.

இதனால் தாண்டிக்குடியிலிருந்து வத்தலகுண்டு செல்லும் மலைச்சாலையில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. இதையடுத்து பொக்லைன் இயந்திரம் மூலம் பாறைகள் அகற்றப்பட்டன. இதையடுத்து சுமாா் 10 மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் மலைச்சாலையில் போக்குவரத்து தொடங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.