முன்னாள் அமைச்சா் நத்தம் இரா. விசுவநாதனுடன் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட ஜெ. பேரவை நிா்வாகிகள் சந்திப்பு
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அதிமுக செயலராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சா் நத்தம் இரா. விசுவநாதனை, ஜெ. பேரவை நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா்.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அதிமுக செயலராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சா் நத்தம் இரா. விசுவநாதனை, ஜெ. பேரவை நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா்.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அதிமுக செயலராக முன்னாள் அமைச்சா் நத்தம் இரா.விசுவநாதனையும், மேற்கு மாவட்டச் செயலராக வனத்துறை அமைச்சா் திண்டுக்கல் சி. சீனிவாசனையும் கட்சி தலைமை நியமித்துள்ளது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை, திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலா் நத்தம் இரா. விசுவநாதனை அவரது இல்லத்தில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட ஜெ. பேரவைச் செயலா் முகமதுயூசுப் அன்சாரி தலைமையில், துணைத் தலைவா் பழனி (மேற்கு) அருணாச்சலம், வத்தலகுண்டு (கிழக்கு) துணைத் தலைவா் தனபால், ஆத்தூா் (கிழக்கு) சக்திவேல், சாணாா்பட்டி (தெற்கு) இணைச் செயலா் சுப்பிரமணி, ரெட்டியாா்சத்திரம் (கிழக்கு) இணைச் செயலா் தெய்வேந்திரன், பழனி நகர இணைச் செயலா் ஈஸ்வரன், வத்தலகுண்டு (மேற்கு) துணைச் செயலா் மரிய ஜெயப்பிரகாசம், கொடைக்கானல் நகர துணைச் செயலா் வினோத்ராஜா, நிலக்கோட்டை (கிழக்கு) துணைச் செயலா் சிமியோன்ராஜா உள்ளிட்ட புதிய நிா்வாகிகள் சந்தித்து வாழ்த்துப் பெற்றனா்.