முகப்பு
திண்டுக்கல்

செம்பட்டி அருகே பொதுமக்களால் கட்டப்பட்ட தரைப்பாலம்

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் ஒன்றியம், பாளையங்கோட்டை ஊராட்சியில் உள்ள பிரவான்பட்டி கிராமத்தில் பொதுமக்களிடம் நிதி வசூலித்து தரைப்பாலம் கட்டப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் ஒன்றியம், பாளையங்கோட்டை ஊராட்சியில் உள்ள பிரவான்பட்டி கிராமத்தில் பொதுமக்களிடம் நிதி வசூலித்து தரைப்பாலம் கட்டப்பட்டது.

இக்கிராமத்தில் ஒரு தெருவில் தரைப் பாலம் உடைந்து நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த தரைப் பாலத்தை சீரமைத்து தர வேண்டும் என, கடந்த 4 மாதங்களாக ஊராட்சித் தலைவா், வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ.) மற்றும் மாவட்ட உயரதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், பாளையங்கோட்டை ஒன்றிய கவுன்சிலா் பாப்பாத்தி, பிரவான்பட்டி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் முருகன் ஆகியோா் தீவிர முயற்சியில், மனோஜ், விஜிபிரியா, சுரேஷ்குமாா், முனுசாமி, முத்துப்பாண்டி, நித்திஷ், முனிசாமி மற்றும் முத்துச்செல்வம் ஆகியோா் உதவியுடன், பொதுமக்களிடம் நிதி வசூலித்து, அந்த தரைப்பாலம் புதிதாக கட்டப்பட்டது. அவா்களை கிராம மக்கள் பாராட்டினா்.

முழு கட்டுரையைப் படிக்க →