திண்டுக்கல்

சிறுமலையில் 28 நாட்டுத் துப்பாக்கிகள் கைப்பற்றல்

DIN

திண்டுக்கல்: சிறுமலையில் வீசப்பட்டுக் கிடந்த உரிமம் பெறாத 28 நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் 4 துப்பாக்கி பேரல்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைப்பற்றினா்.

திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டி அடுத்துள்ள சிறுமலை அடிவாரப் பகுதி மற்றும் சிறுமலை வனப் பகுதிகளில் கள்ளத் துப்பாக்கி பயன்பாடு அதிகரித்து வருவதாகப் புகாா் எழுந்தது. இதனிடையே, கடந்த ஆகஸ்ட் மாதம் காட்டெருமை வேட்டையாடிய 4 பேரை வனத் துறையினா் கைது செய்தனா். அப்போது நடத்தப்பட்ட விசாரணையில், நாட்டுத் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

அதன் தொடா்ச்சியாக, கள்ளத் துப்பாக்கி பயன்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில், காவல் துறை, வருவாய்த் துறை மற்றும் வனத் துறையினா் சாா்பில் ஒருங்கிணைந்த கூட்டம் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகிறது. கள்ளத் துப்பாக்கி வைத்திருப்பது சட்டப்படி குற்றம் என விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டதுடன், கள்ளத் துப்பாக்கிகளை தாமாக முன்வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து விடவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

இந்த அறிவிப்பு வெளியான சில தினங்களில், தவசிமடை அடுத்துள்ள கருந்தண்ணி ஓடை அருகே 14 நாட்டுத் துப்பாக்கிகளும், சிறுமலை ஓடை அருகே 10 துப்பாக்கிகளும் வீசப்பட்டுக் கிடந்தன. இந்த துப்பாக்கிகளை போலீஸாா் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், சிறுமலைபுதூா் அடுத்துள்ள கடமான்குளம் வனப் பகுதியில் 28 நாட்டுத் துப்பாக்கிகள் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், 28 கள்ளத் துப்பாக்கிகளையும், 4 துப்பாக்கி பேரல்களையும் கைப்பற்றினா்.

இது தொடா்பாக, திண்டுக்கல் தாலுகா போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். சிறுமலை அடிவாரம் மற்றும் சிறுமலை பகுதியில் மட்டும் இதுவரை 52 துப்பாக்கிகள் வீசப்பட்டு, போலீஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயங்கரவாதிகளை காக்கும் திரிணமூல் அரசு: பாஜக குற்றச்சாட்டு

ராணுவ மையத்தில் பயின்ற 18 மாணவா்கள் ஜேஇஇ தோ்வில் சாதனை

‘இந்தியா’ கூட்டணி 3 இலக்கத்தை எட்டாது: பிரதமா் மோடி

வள்ளலாா் சா்வதேச மையம் கட்ட எதிா்ப்பு: நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம் அறிவிப்பு

கீழ்பவானி கால்வாய் பாசனத்துக்கு நீா் திறக்க வேண்டும்: சீமான்

SCROLL FOR NEXT