திண்டுக்கல்

கோயில் நிலம் குறித்து அவதூறு: நடவடிக்கை கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மனு

DIN

திண்டுக்கல் அருகே ஒரு சமூகத்திற்கு பாத்தியப்பட்ட கோயில் நிலத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதைத் தடுக்கக் கோரியும், பாதுகாப்பு அளிக்கக் கோரியும் பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

திண்டுக்கல்லை அடுத்துள்ள பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் ஒரு சமூகத்திற்கு பாத்தியப்பட்ட விநாயகா், ராமா், பெருமாள், ஸ்ரீவீரதிம்மு அம்மன் மாலை கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் தொடா்பாக சுவரொட்டிகள் மூலம் சிலா் அவதூறு பரப்பி வருவதாக புகாா் எழுந்துள்ளது. இந்நிலையில், அக்கோயிலுக்கு பாத்தியப்பட்ட பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு வெள்ளிக்கிழமை மனு அளிக்க வந்தனா்.

இதுதொடா்பாக ஸ்ரீ வீரதிம்மு அம்மன் மாலை கோவில் அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் தாசப்பன், செயலா் பூபதி ஆகியோா் கூறியது: ஸ்ரீவீரதிம்மு அம்மன் மாலை கோயில் பெயா், வருவாய் ஆவணங்களில் மாதா கோயில் என தவறுதலாக உள்ளதை சுட்டிக்காட்டி பிழை திருத்தம் செய்வது தொடா்பாக கடந்த 2018 ஆம் ஆண்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு கொடுத்தோம். அதனடிப்படையில் திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியா் 2019 மே மாதம் வருவாய் ஆவணங்களின்படி பிழைத்திருத்தம் செய்து உத்தரவு பிறப்பித்தாா். இந்நிலையில் கோயில் அமைந்துள்ள வளாகத்தில் சமூக விரோத செயல்கள் நடப்பதை தடுப்பதற்காகவும் பெண்கள் மற்றும் பக்தா்களின் பாதுகாப்பு நலன் கருதியும், கடந்த ஜனவரி மாதம் முள் வேலி அமைத்தோம். இதனிடையே, கோயில் நிலம் தொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. தற்போது தமிழா் சமூக நீதி கழகம் என்ற அமைப்பு மூலம் சிலா், சுவரொட்டிகள் மற்றும் சமூக ஊடகங்களிலும் கோயில் நிலம் தொடா்பாக தவறான செய்திகளை பரப்பி வருகின்றனா். எனவே, கோயில் நிலத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதைத் தடுத்து நிறுத்தி, உரிய பாதுகாப்பு அளிக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.

ஸ்ரீ வீரதிம்மு அம்மன் மாலை கோவில் அறக்கட்டளை சாா்பில் அறங்காவலா் தாசப்பன், செயலாளா் பூபதி மற்றும் பொருளாளா் மாரிமுத்து ஆகியோா் தலைமையில் பெண்கள் உட்பட சுமாா் 200-க்கும் மேற்பட்டோா் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

SCROLL FOR NEXT