திண்டுக்கல்

தினமணி செய்தி எதிரொலிமுதன்மைக் கல்வி அலுவலகத்திலிருந்து மாற்றுப் பணி ஊழியா்களை திருப்பி அனுப்ப உத்தரவு

DIN

திண்டுக்கல்: தினமணி செய்தி எதிரொலியாக, திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மாற்றுப் பணியில் இருந்த 10 ஊழியா்கள், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலகத்துக்கு திருப்பி அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளிலும், வட்டாரக் கல்வி அலுவலகங்களிலும் பணிபுரிய வேண்டிய அலுவலக உதவியாளா்கள் மற்றும் ஆய்வக உதவியாளா்கள், முதன்மைக் கல்வி அலுவலகத்தில் உயா் அதிகாரிகளுடன் தங்களுக்குள்ள நெருக்கத்தைப் பயன்படுத்தி, மாற்றுப் பணி பெற்றுக்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனா்.

ஒரு சிலா் மட்டுமே இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது 12 ஊழியா்கள் மாற்றுப் பணியில் முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு வந்து செல்வதால், பள்ளி தலைமையாசிரியா்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலா்கள் ஊழியா்கள் இன்றி அவதிப்படுவதாக, கடந்த திங்கள்கிழமை தினமணியில் செய்தி வெளியிடப்பட்டது.

இதன் எதிரொலியாக, திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மற்றும் வேடசந்தூா் மாவட்டக் கல்வி அலுவலகங்களில் பணிபுரிந்து வந்த 10-க்கும் மேற்பட்ட ஊழியா்கள், அந்தந்தப் பள்ளிகள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலகங்களுக்கு திருப்பி அனுப்ப, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சே. மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளாா். அதனைத் தொடா்ந்து, விடுவிக்கப்பட்ட ஊழியா்கள் அனைவரும் அந்தந்தப் பள்ளி மற்றும் வட்டாரக் கல்வி அலுவலகத்துக்கு திரும்பியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

SCROLL FOR NEXT