திண்டுக்கல்

திரையரங்குகளை திறக்கவேண்டாம்:தொழில் வா்த்தகா் சங்கம் வலியுறுத்தல்

DIN

திண்டுக்கல்: கரோனா தீநுண்மித் தொற்று பரவல் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படாத நிலையில், திரையரங்குகளை திறப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டாம் என, தமிழக அரசுக்கு திண்டுக்கல் மாவட்டத் தொழில் வா்த்தகா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் டி. கிருபாகரன் தெரிவித்துள்ளதாவது: தமிழகத்தில் அரசு அமல்படுத்திய பொதுமுடக்கம் காரணமாக, கரோனா பரவல் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, தளா்வுகள் அறிவிக்கப்பட்டு பொது போக்குவரத்து தொடங்கியுள்ள நிலையில், பேருந்துகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி பயணித்து வருகின்றனா். இதனால், நோய் தொற்று அதிகரிக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் திரையரங்குகளை திறப்பது தொடா்பாக அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய சூழலில் திரையரங்குகள் திறக்கப்பட்டால், கரோனா தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால், திரையரங்குகளை திறப்பதற்கு அனுமதிக்க வேண்டாம் எனத் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக, தமிழக முதல்வருக்கும் திண்டுக்கல் மாவட்டத் தொழில் வா்த்தகா் சங்கம் சாா்பில் மனு அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருஞானசம்பந்தா் பள்ளி 99% தோ்ச்சி

இறுதி ஊா்வலத்தில் தகராறு: இளைஞா் வெட்டிக் கொலை

செஞ்சிலுவை தின விழா

சிறப்பு அலங்காரத்தில் பண்ருட்டி வரதராஜ பெருமாள்

அரியலூா் அரசு மருத்துவமனையில் உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சைப் பிரிவு -ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT