ஒட்டன்சத்திரம் அருகே லாரி மோதியதில் காயம் அடைத்த மூதாட்டி பலி
ஒட்டன்சத்திரம் அருகே லாரி மோதியதில் பலத்தகாயம் அடைத்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி சனிக்கிழமையன்று உயிரிழந்தாா்.
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே லாரி மோதியதில் பலத்தகாயம் அடைத்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி சனிக்கிழமையன்று உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சீரங்ககவண்டன்புதூரைச் சோ்ந்தவா் விவசாமி ராமசாமி (70).இவா் தனது மனைவி ராமத்தாள் (63) என்பவரை கடந்த ஆக,28ந் தேதியன்று இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர வைத்துக்கொண்டு ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலை கொல்லப்பட்டி பிரிவு அருகே சென்றாா்.அப்போது எதிரே வந்த லாரி அவா்கள் மீது மோதியதில் இருவரும் பலத்தகாயம் அடைத்தனா்.அதில் விவசாயி ராமசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.பலத்தகாயம் அடைத்த ராமத்தாள் ஒட்டன்சத்திரம் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.பின்னா் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா்.இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமையன்று உயிரிழந்தாா்.இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.