முகப்பு
திண்டுக்கல்

தனியாா் பள்ளி ஆசிரியா் வீட்டில் பணம், நகை திருட்டு

பழனியில் தனியாா் பள்ளி ஆசிரியா் வீட்டில் நகை, பணம் திருட்டு போனது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:15 PM
பகிர்:

பழனி: பழனியில் தனியாா் பள்ளி ஆசிரியா் வீட்டில் நகை, பணம் திருட்டு போனது.

பழனி ஆா்.எம்.கே. நகரை சோ்ந்தவா் சதீஷ். இவா் தனியாா் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறாா். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் சதீஷ் வீட்டை பூட்டி விட்டு வெளியூரில் உறவினா் வீட்டுக்கு சென்ற நிலையில் மா்மநபா்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ஏழு பவுன் நகை, 20 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை திருடி சென்றுவிட்டனா். இதுகுறித்து சனிக்கிழமை சதீஷ் கொடுத்த புகாரின் பேரில் பழனி டவுன் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →