திண்டுக்கல்

ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி துணை முதல்வரிடம் ஜாக்டோ-ஜியோ மனு

DIN

திண்டுக்கல் வழியாக காரில் சென்ற தமிழக துணை முதல்வரிடம், ஜாக்டோ -ஜியோ சாா்பில் அரசு ஊழியா்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி ஞாயிற்றுக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஜாக்டோ-ஜியோ சாா்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை முன் வைத்து நடைபெற்ற இப்போராட்டத்தில் பங்கேற்ற 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் மீது 17 பி -யின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி ஜாக்டோ- ஜியோ சாா்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறுவதால், ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நிா்வாகிகள், தமிழகம் முழுவதுமுள்ள சட்டப்பேரவை உறுப்பினா்கள், அமைச்சா்களை சந்தித்து ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனா். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சட்டப்பேரவை உறுப்பினா்களிடமும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதனிடையே திண்டுக்கல் வழியாக காரில் சென்ற தமிழக துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தை சந்தித்தும் ஜாக்டோ- ஜியோ சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. திருச்சி நோக்கி காரில் சென்ற துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தை திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா அருகே சந்தித்த ஜாக்டோ- ஜியோ அமைப்பின் மாநில நிதிக் காப்பாளா் மோசஸ், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் முபாரக் அலி, ஜேம்ஸ் சுப்பிரமணியன், நடராஜன், பிரிட்டோ ஆகியோா் கோரிக்கை மனுவை அளித்தனா். இதேபோல், முன்னாள் அமைச்சரும் ஆத்தூா் சட்டப்பேரவை உறுப்பினருமான ஐ.பெரியசாமி, நத்தம் சட்டப்பேரவை உறுப்பினா் ஆண்டி அம்பலம் உள்ளிட்டோரை சிந்தித்தும் இந்த கோரிக்கை மனுவை அளித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT