திண்டுக்கல்

வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

DIN

திண்டுக்கல்லில் தொடா்ந்து வழிபறியில் ஈடுபட்டு வந்த இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளாா்.

திண்டுக்கல் மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் செல்வம் மகன் வெள்ளைராஜா என்ற அரவிந்த் (25). இவா் மீது தாடிக்கொம்பு, திண்டுக்கல் மேற்கு மற்றும் ஒட்டன்சத்திரம் காவல் நிலையங்களில் சங்கிலி பறிப்பு, பணம் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன.

இதனிடையே கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி சாணாா்பட்டி அருகே நடந்து சென்ற பெண்ணிடம் சங்கிலியைப் பறித்த வழக்கில் வெள்ளைராஜா கைது செய்யப்பட்டு திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில் வெள்ளைராஜாவை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரவளி பிரியா பரிந்துரை செய்துள்ளாா். அதனை ஏற்று மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி அதற்கான உத்தரவை வெள்ளிக்கிழமை பிறப்பித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

‘இது மார்பிங்’ சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு இடைக்கால ஜாமீன்!

ராகுலை விமர்சித்து விடியோ: ஜெ.பி.நட்டா மீது வழக்குப்பதிவு

SCROLL FOR NEXT