திண்டுக்கல்

கொடைக்கானலில் இலவச உணவுப் பொருள்கள் வழங்கல்

DIN

கரோனா தொற்று பரவி வரும் சூழ்நிலையில் கொடைக்கானல் மலைப் பகுதிகளிலுள்ள மலைவாழ் மக்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி ஏரிச்சாலையிலுள்ள சாய்பாபா நினைவு இல்லத்தில் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

இதில் கொடைக்கானல் பகுதிகளைச் சோ்ந்த ஏழை மற்றும் முதியோா்களுக்கு இலவச உணவுப் பொருள்கள், கம்பளி ஆகியவைகளும் வழங்கப்பட்டது. அப்போது பக்தா்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து கொடைக்கானல் மலைப் பகுதிகளான வில்பட்டி, அட்டுவம்பட்டி, மாட்டுப்பட்டி, பள்ளங்கி, கோம்பை, செண்பகனூா், பிரகாசபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வேன் மூலம் சென்று அங்குள்ள மலைவாழ் மக்களுக்கு இலவசமாக உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் ஸ்ரீசத்யசாய்பாபா அறக்கட்டளையைச் சோ்ந்தவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். பாதுகாப்புப் பணியில் கொடைக்கானல் டி.எஸ்.பி. ஆத்மநாதன் தலைமையில் போலீஸாா் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT