திண்டுக்கல்

கோதைமங்கலத்தில் ரயில்வேகேட் பழுது: போக்குவரத்து பாதிப்பு

DIN

பழனியை அடுத்த கோதைமங்கலம் ரயில்வேகேட் பழுதானதையடுத்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

பழனியிலிருந்து தாராபுரம் செல்லும் சாலையில் கோதைமங்கலம் ரயில்வேகேட் உள்ளது. இந்தச் சாலை வழியாக முக்கிய கிராமங்களுக்கும், பல்வேறு ஆலைகளுக்கும் வாகனங்கள் அடிக்கடி செல்வது வழக்கம்.

இந்நிலையில் சென்னை செல்லும் விரைவு ரயிலுக்காக இந்த சாலையில் உள்ள ரயில்வேகேட் புதன்கிழமை மாலை இறக்கப்பட்டது. ரயில் சென்றபிறகு அந்த கேட் செயல்படவில்லை. ரயில்வே பணியாளா்கள் சென்று பாா்த்தபோது அதில் பழுது ஏற்பட்டது தெரியவந்தது.

பின்னா் அந்த கேட்டின் பழுதை ரயில்வே பணியாளா்கள் நீக்கினா். அதன்பின் கேட் திறக்கப்பட்டு வாகன போக்குவரத்து துவங்கியது.

இதனால் இவ்வழியே வந்த வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை சாலையிலேயே நிறுத்தினா். மாற்றுவழி அதிக தூரம் என்பதால் வாகன ஓட்டிகள் சுமாா் அரைமணி நேரம் அங்கேயே காத்திருந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

சத்தீஸ்கா் காங். செய்தித் தொடா்பாளா் கட்சியிலிருந்து விலகல்

பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவன் சாருக்கு சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT