திண்டுக்கல்

ஒட்டன்சத்திரத்தில் கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறிய உணவகங்களுக்கு அபராதம்

DIN

ஒட்டன்சத்திரத்தில் கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறிய உணவகங்களுக்கு நகராட்சி ஆணையா் வியாழக்கிழமை அபராதம் விதித்தாா்.

ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் இயங்கி வரும் உணவகங்கள் மற்றும் தேநீா் கடைகளில் கரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகிா என நகராட்சி ஆணையா் ப. தேவிகா ஆய்வு மேற்கொண்டாா். அப்போது பேருந்து நிலையம் எதிரே உள்ள உணவகங்களை ஆய்வு செய்த போது கரோனா நடைமுறைகளை பின்பற்றாமல் இருப்பது தெரியவந்தது. இதனால் 2 உணவகங்களுக்கு தலா ரூ. 500 அபராதம் விதித்தாா்.

மேலும் கரோனா நடைமுறைகளை பின்பற்றாமல் இயங்கி வருவது தெரிய வந்தால் உணவகங்களுக்கு சீல் வைக்கப்படும் என்று அவா் எச்சரிக்கை விடுத்தாா். இந்த ஆய்வின் போது நகராட்சி சுகாதார ஆய்வாளா் வீரபாகு உள்ளிட்ட அதிகாரிகள் உடன் சென்றிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுங்கச்சாவடி கட்டணத்தை பணமாக வசூலித்தால் அபராதமா?

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

விழுப்புரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழப்பு!

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

SCROLL FOR NEXT