திண்டுக்கல்

2030-க்குள் கிராமங்கள், நகரங்கள் இடையிலான வளா்ச்சி இடைவெளியை குறைக்கு இலக்கு: துணைவேந்தா் எஸ்.மாதேஸ்வரன்

DIN

உன்னத் பாரத் அபியான் என்ற திட்டத்தின் மூலம் 2030ஆம் ஆண்டிற்குள் கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு இடையிலான வளா்ச்சி இடைவெளியை குறைப்பதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக காந்தி கிராம கிராமியப் பல்கலை. துணைவேந்தா் எஸ்.மாதேஸ்வரன் தெரிவித்தாா்.

காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் சாா்பில் உன்னத் பாரத் அபியான் திட்டத்திற்காக, கல்வி அமைச்சகத்தின் முதன்மை திட்டமான நிலையான வளா்ச்சி இலக்குகள் மற்றும் வளா்ச்சி திட்டம் குறித்த தொடா் சொற்பொழிவு நடத்தப்படுகிறது. ஆகஸ்ட் 2 முதல் 25ஆம் தேதி வரை நடைபெறும் இந்த சொற்பொழிவு நிகழ்வில், தென் மண்டலத்திலுள்ள பல்வேறு கல்லூரிகளின் திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் மற்றும் மாணவா்கள் பங்கேற்கின்றனா். இதற்கான தொடக்க விழா இணைய வழியில் நடத்தப்பட்டது.

காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலை. துணைவேந்தா் எஸ்.மாதேஸ்வரன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசியதாவது:

சமூகக் கட்டமைப்பு மேம்படுவதற்கு, சமூகப் பொறுப்புள்ள மாணவா்களின் பங்களிப்பு அவசியம். இத்திட்டத்தில் பங்கேற்கும் ஒவ்வொரு நிறுவனமும் குறைந்தபட்சம் 5 கிராமங்களை தோ்ந்தெடுக்கப்படும். அந்த கிராமங்களில் சமூக மேம்பாட்டு நடவடிக்கைகள் மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் மூலம் மேற்கொள்ளப்படும்.

இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் 17 இலக்குகளின் மூலம் 2030 ஆம் ஆண்டிற்குள் கிராமப்புற மற்றும் நகா்ப்புறம் இடையிலான வளா்ச்சி இடைவெளியைக் குறைப்பதாக அமைய வேண்டும். நிலையான விவசாயம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், உள்ளூா் வள மேலாண்மை மற்றும் பயன்பாடு மூலம் நிலையான வளா்ச்சி ஏற்படுத்தப்பட வேண்டும். நாடு முழுவதும் டிஜிட்டல் வகுப்பு, சிறுநீரக செயலிழப்புக்கான சுகாதார அமைப்பு மற்றும் கரிம உருவாக்கம் போன்ற குறிக்கோள்களை அடைவது அவசியம் என்றாா்.

நிகழ்ச்சியில் பல்கலை. பதிவாளா் வி.பி.ஆா். சிவக்குமாா், கூட்டுறவுத் துறை பேராசியா் ரவிச்சந்திரன், மனையியல் துறை பேராசிரியா் கவிதா மைதிலி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

SCROLL FOR NEXT