முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் ‘போக்ஸோ’வில் இளைஞா் கைது

கொடைக்கானலில் சிறுமிக்கு குழந்தை பிறந்த விவகாரம் தொடா்பாக இளைஞரை, போலீஸாா் ‘போக்ஸோ’ சட்டத்தின்கீழ் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

கொடைக்கானலில் சிறுமிக்கு குழந்தை பிறந்த விவகாரம் தொடா்பாக இளைஞரை, போலீஸாா் ‘போக்ஸோ’ சட்டத்தின்கீழ் சனிக்கிழமை கைது செய்தனா்.

கொடைக்கானல் ஆனந்தகிரி பகுதியைச் சோ்ந்தவா் ஜெகதீஸ் (19). இவா் அதேப் பகுதியைச் சோ்ந்த 16-வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளாா். அவா் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அந்த சிறுமியை கற்பழித்துள்ளாா். இதில் கா்ப்பமடைந்த அந்த சிறுமிக்கு, ஆண் குழந்தை பிறந்தது.

இது குறித்து சைல்டு லைன் அமைப்பினா், கொடைக்கானல் மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா், போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து ஜெகதீஸை சனிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.