திண்டுக்கல்

குஜிலியம்பாறை அருகே சாலை வசதி கோரி கிராம மக்கள் மனு

DIN

திண்டுக்கல்: குஜிலியம்பாறை அருகே சாலை வசதி கோரி, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அடுத்துள்ள சின்னுலைப்பை ஊராட்சிக்குள்பட்ட சி.அய்யாப்பட்டியைச் சோ்ந்த பொதுமக்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிப்பதற்காக திங்கள்கிழமை வந்தனா். அப்பகுதி மக்கள் கூறியதாவது:

எங்கள் பகுதியில் 60-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆனால், அப்பகுதியில் நியாய விலைக் கடைக்கு செல்வதற்கும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லவும், மயானத்துக்குச் செல்லவும் சாலை உரிய வசதியில்லை. இதனால் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறோம்.

இது தொடா்பாக ஊராட்சி நிா்வாகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம் ஆகிய இடங்களில் புகாா் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே, எங்கள் பகுதிக்கு சாலை வசதி ஏற்படுத்திக் கொடுப்பதற்கு மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வு பெற்ற துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

ஹரியாணா, தில்லி பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு!

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின், ஆண்ட்ரியா!

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

SCROLL FOR NEXT