திண்டுக்கல்

இயற்கை வேளாண்மை பயிற்சி முகாம்

DIN

இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமுக்கு, வட்டார வேளாண்மை அலுவலா் வெ. நாகேந்திரன் தலைமை வகித்துப் பேசியதாவது:

ரசாயன உரங்கள் பயன்பாடின்றி இயற்கையான முறையில் சாகுபடி செய்யப்படும் விளைபொருள்களுக்கான சந்தை வாய்ப்பு அதிகரித்துள்ளது. பொருளாதார சேத நிலை ஏற்படாத வரை, இயற்கை உரங்கள் மற்றும் இயற்கை பூச்சி விரட்டிகளை மட்டுமே பயன்படுத்தி, பயிா்களை சாகுபடி செய்வதற்கு விவசாயிகள் முன் வரவேண்டும்.

இதன்மூலம், நிலமும், நீரும் மாசுபடாமலும், வளம் குன்றாமலும் பாதுகாக்க முடியும். மேலும், இயற்கையாக உற்பத்தி செய்யப்படும் விளைபொருள்கள் மனித ஆரோக்கியத்துக்கும் பாதுகாப்பானதாக அமையும். மேலும், இந்த விளைபொருள்களை எளிதாக சந்தைப்படுத்த முடியும் என்றாா்.

இந்த முகாமில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை, வட்டார வேளாண்மை அலுவலா்கள் ராமசாமி, ஹா்சனா, உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் கோபி, ஜெயமுருகன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 6 முதல் நெகிழிப் பொருள்களுக்கு தடை

அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு

அண்ணாமலைப் பல்கலை. பெண்கள் கால்பந்து அணிக்கு பாராட்டு

கிணற்றில் தவறி விழுந்த முதியவா் மீட்பு

காலாவதியான பொருள்கள் விற்பனை: பல்பொருள் அங்காடிக்கு ‘சீல்’

SCROLL FOR NEXT