திண்டுக்கல்

புகையிலைப் பொருள்களை விற்றகடைகளுக்கு அபராதம்

DIN

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் புகையிலைப் பொருள்களை விற்ற கடைகளுக்கு ரூ.5 ஆயிரம் வீதம் திங்கள்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

திண்டுக்கல் நகா் பகுதியில், உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் மற்றும் போலீஸாா், புகையிலைப் பொருள்கள் விற்பனை குறித்து அவ்வப்போது கடைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில், திண்டுக்கல் பேருந்து நிலையத்திலுள்ள கடைகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் செல்வம் தலைமையில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, 3 கடைகளிலிருந்து 1.50 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த கடைகளுக்கு தலா ரூ. 5ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுதொடா்பாக உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் கூறுகையில், திண்டுக்கல் நகரில் கடந்த 20 நாள்களாக நடத்தப்பட்ட சோதனையின்போது 83 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றை விற்பனைக்கு வைத்திருந்த 23 கடைகளுக்கு தலா ரூ. 5ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருள்களின் மதிப்பு ரூ.2 லட்சம் எனத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

SCROLL FOR NEXT