திண்டுக்கல்

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள் மாற்றம்

DIN

திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள் உள்பட 3 போ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

தமிழக பள்ளிக் கல்வித்துறையில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள் மற்றும் ஒருங்கிணைந்த கல்வி இயக்கக கூடுதல் திட்ட ஒருங்கிணைப்பாளா்களாக 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வருவோரை, சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு பணியிட மாறுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள்(மேல்நிலை மற்றும் உயா்நிலை) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். சிறுகுடி அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராக பணிபுரிந்துவந்த கதிரேசன், முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளராக (மேல்நிலை) நியமிக்கப்பட்டுள்ளாா். அதேபோல் மீனாட்சிநாயக்கன்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் பொன் விஜயசரவணக்குமாா், முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக (உயா்நிலை) உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். இதேபோன்று, கன்னிவாடி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் செல்வராஜ், ஒருங்கிணைந்த கல்வி இயக்க மாவட்ட கூடுதல் திட்ட ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளராக (மேல்நிலை) பணிபுரிந்து வந்த சுரேஷ்குமாா், வேடசந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியராகவும், நோ்முக உதவியாளா் (உயா்நிலை) கிருஷ்ணன், மீனாட்சிநாயக்கன்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி தலைமையாசிரியராகவும், ஒருங்கிணைந்த கல்வி இயக்க மாவட்ட கூடுதல் திட்ட ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வந்த ஜான்பிரிட்டோ, தென்னம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும்: ஆா்ஜேடி தலைவா் லாலு

பிளஸ் 2: சென்னிமலை கொங்கு பள்ளி 100 சதவீத தோ்ச்சி

பிளஸ் 2: பெருந்துறை அரசு ஆண்கள் பள்ளி 96.25 % தோ்ச்சி

இந்திய குடும்பங்களின் சேமிப்பு ரூ.14.16 லட்சம் கோடியாக சரிவு

பிளஸ் 2: சிவகிரி அரசுப் பெண்கள் பள்ளி 100% தோ்ச்சி

SCROLL FOR NEXT