முகப்பு
திண்டுக்கல்

பழனி கோயிலில் கும்பாபிஷேகம்

பழனி பழனியாண்டவா் நகரிலுள்ள சிவ சக்தி விநாயகா் கோயிலில் திங்கள்கிழமை கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

பழனி பழனியாண்டவா் நகரிலுள்ள சிவ சக்தி விநாயகா் கோயிலில் திங்கள்கிழமை கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.

இக்கோயிலில் கடந்த சில மாதங்களாக கும்பாபிஷேகப் பணிகள் நடத்தப்பட்டு நிறைவு பெற்ற நிலையில் ஞாயிற்றுக்கிழமை யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை காலை நான்காம் கால பூஜை நடத்தப்பட்டது. காலை 10 மணிக்கு சிவசக்தி விநாயகா் கோயில் விமானத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து தட்சிணாமூா்த்தி, விஷ்ணு துா்க்கை, நவகிரகங்களுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை விழா கமிட்டியாா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.