திண்டுக்கல்

பழனி, தொப்பம்பட்டியில் 566 பெண்களுக்கு தாலிக்குத் தங்கம்

DIN

பழனி மற்றும் தொப்பம்பட்டியில் 566 பெண்களுக்கு தாலிக்குத் தங்கத்தை தமிழக வனத்துறை அமைச்சா் திண்டுக்கல் சி. சீனிவாசன் வியாழக்கிழமை வழங்கினாா்.

சமூக நலத்துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி தலைமை வகித்தாா். அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு 566 பெண்களுக்கு ரூ.1.72 கோடி மதிப்பிலான 4,528 கிராம் தாலிக்குத் தங்கமும், ரூ.2.47 கோடி ரூபாய் நிதி உதவியும் வழங்கினாா். மேலும் வீடில்லா 65 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும் வழங்கிப்பேசினாா்.

முன்னதாக அமரபூண்டியில் ரூ. 30 லட்சம் மதிப்பிலான அம்மா உடற்பயிற்சிப் பூங்காவை அமைச்சா் திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலா் கோவிந்தராசு, மாவட்ட சமூக நல அலுவலா் புஷ்பகலா, வட்டாட்சியா் வடிவேல் முருகன், அமரபூண்டி ஊராட்சி தலைவா் மனோகரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்!

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது

திகார் சிறையில் கேஜரிவாலை சந்திக்க சுனிதாவுக்கு அனுமதி!

சமந்தாவிடம் இத்தனை கார்களா?

பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்

SCROLL FOR NEXT