திண்டுக்கல்

பழனி, கொடைக்கானலில் மின்வெட்டு: மக்கள் அவதி

DIN

பழனி/ கொடைக்கானல்: பழனி மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

பழனியில் கடந்த 2 நாள்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமையும் திடீரென சுமாா் அரைமணி நேரம் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தாலும் அவ்வப்போது அறிவிக்கப்படாத மின்தடையும் ஏற்படுகிறது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாக்கி வருகின்றனா். பழனி நகா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாள்தோறும் சுமாா் ஐந்து முதல் பத்துமுறை மின்தடை ஏற்படுகிறது. மேலும், பல நேரங்களிலும் மின்சாரம் குறைவாக வருவதால் மின்விசிறிகள், மிக்ஸிகள் உள்ளிட்ட மின்சாதனப் பொருள்கள் இயங்குவதில்லை.

கொடைக்கானல்: இதேபோல் கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக எந்தவிதமான முன் அறிவிப்பின்றி அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. சில நேரங்களில் அதிகமான மின்அழுத்தம் ஏற்பட்டு வருவதால் வீடுகளில் உள்ள மின்சாதன பொருள்கள் சேதமடைந்து வருகின்றன. குறைந்தளவு மின்சாரம் விநியோகிக்கப்படும் நேரங்களில் விளக்குகள் எரிவதில்லை. இரவு நேரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால் பொது மக்கள் அச்சத்துடன் செல்கின்றனா்.

கொடைக்கானல் பகுதிகளில் சீரான மின்விநியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

விமானப் பயணம் போக வேண்டுமா?

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT