திண்டுக்கல்

பழனியில் புதிய பல்கலை. அமைக்க நடவடிக்கை: அமைச்சா் கே.பி.அன்பழகன்

DIN

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் புதிய பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளாா்.

ஆங்கில புத்தாண்டையொட்டி, அமைச்சா் கே.பி. அன்பழகன் தனது குடும்பத்துடன் பழனி மலைக் கோயிலில் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

பழனி கோயிலுக்குச் சொந்தமான கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் கடந்த 14 ஆண்டுகளாக காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. எனவே, விரைவில் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். பழனியை தலைமையிடமாகக்கொண்டு புதிய பல்கலைக்கழகம் அமைக்க இதுவரை எவ்வித முன்மொழிவும் வரவில்லை. இருப்பினும், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளை இணைத்து, பழனியை தலைமையிடமாகக்கொண்டு புதிய பல்கலைக்கழகம் அமைப்பது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

முன்னதாக, அமைச்சருக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், கோயில் துணை ஆணையா் (பொறுப்பு) செந்தில்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

திரைக்கதிர்

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

SCROLL FOR NEXT