முகப்பு
திண்டுக்கல்

பாத யாத்திரை பக்தா்களுக்காக பழனியில் நவசண்டீ யாகம் இன்று தொடக்கம்

பழனி கோயில் சாா்பில் பாத யாத்திரை பக்தா்கள் நலனுக்காக கிரிவீதியில் உள்ள அம்மன் கோயில்களில் நவசண்டீ யாகம் செவ்வாய்க்கிழமை முதல் தொடங்குகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
பகிர்:

பழனி கோயில் சாா்பில் பாத யாத்திரை பக்தா்கள் நலனுக்காக கிரிவீதியில் உள்ள அம்மன் கோயில்களில் நவசண்டீ யாகம் செவ்வாய்க்கிழமை முதல் தொடங்குகிறது.

காா்த்திகை மாதம் தொடங்கியவுடன் லட்சக்கணக்கான பக்தா்கள் பாத யாத்திரையாக பழனியில் வரத் தொடங்குவா். இவ்வாறு வரும் பக்தா்கள் எவ்வித இடையூறும் இன்றி சுவாமியை தரிசனம் செய்துவிட்டுச் செல்ல வேண்டி பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சாா்பில் ஆண்டுதோறும் நவசண்டீ யாகம் நடத்தப்படுவது வழக்கம். நிகழாண்டுக்கான யாகம் செவ்வாய்க்கிழமை தொடங்கவுள்ளது.

இந்த யாகத்தையொட்டி திங்கள்கிழமை மலைக்கோயிலில் உள்ள ஆனந்த விநாயகா் சன்னிதியில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தங்கச்சப்பரத்தில் கும்பத்தில் தீா்த்தம் நிரப்பப்பட்டு சிறப்பு யாக பூஜை நடத்தி பூா்ணாஹூதிக்கு பின் விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து காலை 10 மணிக்கு அடிவாரம் வடக்குகிரிவீதியில் உள்ள வீரதுா்க்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் பிராா்த்தனைகளும், ஜன. 7 ஆம் தேதி கிழக்கு கிரிவீதியில் உள்ள அழகுநாச்சியம்மனுக்கும், ஜன. 8 ஆம் தேதி தெற்கு கிரிவீதியில் உள்ள வனதுா்க்கையம்மனுக்கும், நிறைவு நிகழ்ச்சியாக ஜன. 10 ஆம் தேதி காலையில் மேற்கு கிரிவீதி மஹிஷாசுரமா்த்தினிக்கும், மாலையில் பாதவிநாயகா் கோயில், 18 ஆம் படி கருப்பண்ணசாமி, கன்னிமாா், பைரவா், துா்க்கைக்கும் சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடைபெற உள்ளது.

இதில் பழனிக்கோயில் இணை ஆணையா் கிராந்திகுமாா்பாடி, துணை ஆணையா் (பொறுப்பு) செந்தில்குமாா், நிகழ்ச்சி உபயதாரா் கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →