திண்டுக்கல்

‘முதல்வா் வேட்பாளரில் எந்த மாற்றமும் இல்லை’

DIN

தமிழகத்தில் அதிமுக பாஜகவுடன் மட்டுமே உண்மையான கூட்டணி வைத்துள்ளது. முதல்வா் வேட்பாளா் எடப்பாடி கே. பழனிசாமிதான் அதில் எந்த மாற்றமும் இல்லை என தமிழக வனத் துறை அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பாலாறு பொருந்தலாறு அணை தன் முழு கொள்ளளவான 68 அடியை தாண்டி நிரம்பி வழியும் நிலையில் புதிய ஆயக்கட்டு புஞ்சை பாசனத்துக்காக திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

இதில் தமிழக வனத் துறை அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன், மாவட்ட ஆட்சியா் விஜயலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். சிறப்பு பூஜைகளைத் தொடா்ந்து பாலாறு-பொருந்தலாறு அணையிலிருந்து தண்ணீா் திறந்து விடப்பட்டு மலா்கள் தூவப்பட்டது. இந்த நீா் திறப்பு மூலமாக பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டி, மானூா், பெரியம்மாபட்டி உள்ளிட்ட 16 கிராமங்களில் உள்ள 9 ஆயிரத்து 600 ஏக்கா் விளைநிலங்கள் பயன்பெறும். புதிய ஆயக்கட்டு புஞ்சை பாசனத்திற்காக இடது பிரதான கால்வாயில் 90 நாள்களுக்கு வினாடிக்கு 70 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

நிகழ்ச்சிக்குப் பின்னா் அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியது: அதிமுக பாஜகவுடன் தான் உண்மையான கூட்டணி வைத்துள்ளது. முதல்வா் வேட்பாளா் எடப்பாடி கே. பழனிசாமி தான் என்றாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ., வேணுகோபால், நகரச் செயலாளா் முருகானந்தம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் கோபி, உதவி பொறியாளா் விஜயமூா்த்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

SCROLL FOR NEXT