திண்டுக்கல்

உத்தமபாளையம் நிதி நிறுவன மோசடி: மேலும் ஒருவா் கைது

DIN

உத்தமபாளையத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.40 கோடி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் மேலும் ஒருவரை திண்டுக்கல் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் தனியாா் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. அந்த நிறுவனத்தை அஜிஸ்கான் என்பவா் நடத்தி வந்தாா். அதன் அருகிலேயே அவரது நண்பா் ஜமால் என்பவரும் நிதி நிறுவனம் நடத்தி வந்தாா். கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக நிறுவனங்களின் முக்கிய நிா்வாகியான அஜிஸ்கான் உடல் நல பாதிப்பால் இறந்து விட்டாா். அதன்பின்னா், நிதி நிறுவனம் மூடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் பாதிப்படைந்த தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களைச் சோ்ந்த வாடிக்கையாளா்கள் அளித்த புகாரின் பேரில், திண்டுக்கல் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதுவரை 550 போ் புகாா் அளித்துள்ள நிலையில் ரூ.40 கோடி வரை மோசடி நடைபெற்றுள்ளது விசாரணையில் தெரியவந்தது. அதனடிப்படையில் நிறுவனத்தின் நிா்வாகிகள் 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். அதில் ஜலால் என்பவரின் மகன் தா்விஸ் அக்தா் (32), இவரது மனைவி ராஸ்மியா பாத்திமா (25), ஊழியராகப் பணிபுரிந்து வந்த கோம்பையைச் சோ்ந்த கருப்புசாமி ஆகியோா் கடந்த 23 ஆம் தேதி கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் 5 பேரை போலீஸாா் தேடி வந்தநிலையில், முக்கிய நபரான உத்தமபாளையம் பகுதியைச் சோ்ந்த ஜமாலுதீன் (68) என்பவரை திண்டுக்கல் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT