திண்டுக்கல்

பழனியில் 70 கிலோ குட்கா பறிமுதல்

DIN

பழனி கடைகளில் புதன்கிழமை நடைபெற்ற திடீா் சோதனையில் 200 கிலோ நெகிழிப் பைகள் மற்றும் 70 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திண்டுக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் டாக்டா் ஜெயராம் பாண்டியன் தலைமையில் பழனி அடிவாரம், கடைவீதி, பேருந்து நிலையம், சந்தை உள்ளிட்ட பல பகுதிகளில் அத்துறையினா் திடீரென ஆய்வு மேற்கொண்டனா்.

103 கடைகளில் மேற்கொண்ட சோதனையில் சுமாா் ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள், புகையிலைப் பொருள்கள், காலாவதியான உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சம்பந்தப்பட்ட கடை உரிமையாளா்களுக்கு ரூ. ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதித்தனா். மேலும் உணவகங்களில் ஆய்வு செய்து பொருள்களின் தரம் காலாவதி தேதியை சோதனையிட்டனா். ஆய்வின் போது பழனி உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் செல்லத்துரை, சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொன்மகள் வந்தாள்!

நூற்றாண்டு கண்ட ஆளுமைகள்

பேரரசின் சிதைவுகள்

தற்காலிக ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன்!

SCROLL FOR NEXT