சஞ்சு சாம்சன் நீக்கம்.. வாழ்த்துப் பதிவை ‘எடிட்’ செய்து வெளியிட்டாரா ஷுப்மன் கில்?
சஞ்சு சாம்சனை நீக்கி விட்டு, இந்திய டெஸ்ட், ஒருநாள் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பதிவிட்டிருப்பது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளதைப் பற்றி...
ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் புகைப்படத்தில் சஞ்சு சாம்சனை நீக்கி விட்டு, இந்திய டெஸ்ட், ஒருநாள் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பதிவிட்டிருப்பது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
10-வது டி20 உலகக் கோப்பைத் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த நிலையில், மார்ச் 8 ஆம் தேதி குஜராத்தின் அகமதாபாத்தில் நிறைவடைந்தது.
நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனின் அதிரடி 89 ரன்கள், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் உள்ளிட்டோரின் அதிரடி அரைசதத்தால் இந்திய அணி 255 ரன்கள் குவித்து 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சதத்தைதையும் பொருள்படுத்தாமல் மெய்நிகர் காலிறுதி, அரையிறுதி, இறுதிப் போட்டி என மூன்று போட்டிகளிலும் (97*, 89, 89) அதிரடியாக விளையாடி ரன்குவித்த சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருதைக் கைப்பற்றினார்.
Advertisement
Advertisement
மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பையைக் கைப்பற்றிய இந்திய அணியை முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் வாழ்த்துத் தெரிவித்தனர்.
இந்த நிலையில், இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் கடந்த நான்கு நாள்களுக்கு முன்னதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திய அணிக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.
அவர் வெளியிட்டிருந்த புகைப்படத்தில் தொடர் நாயகன் சஞ்சு சாம்சனின் புகைப்படத்தை மட்டும் நீக்கிவிட்டு வாழ்த்துப் பதிவிட்டிருந்ததாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பல்வேறு புகைப்படங்கள் வெளியான நிலையில், இந்திய அணியின் கேப்டன் இவ்வாறு செய்யலாமா? எனப் பலரும் தங்களது விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
இந்தப் பதிவு குறித்து சிலர் கில் வேண்டுமென்றே அவ்வாறு செய்திருப்பார் என்றும், அது தெரியாமல் நடத்திருக்கலாம் என்றும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். மேலும், வெவ்வேறு கோணங்களில் புகைப்படங்கள் எடுத்திருப்பதால், சஞ்சுசாம்சன் மறைந்திருப்பது போல தெரியும் என்றும், இது வேண்டுமேன்றே நடத்திருக்க வாய்ப்பில்லை என்றும் ஷுப்மன் கில்லுக்கு ஆதரவாக பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
நியூசிலாந்து தொடருக்கு முன்னதாக டி20 போட்டிகளில் விளையாடி வந்த துணை கேப்டன் ஷுப்மன் கில், டி20 உலகக் கோப்பை அணி மற்றும் நியூசிலாந்து தொடருக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டார். தொடக்க ஆட்டக்காரராக கில்லுக்குப் பதிலாக சஞ்சுசாம்சன் சேர்க்கப்பட்டதாலேயே அவர் விரக்தியில் சஞ்சுவின் புகைப்படத்தை நீக்கியிருக்கலாம் என்றும் அவருக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.
India won the T20 World Cup for the record third time on March 8, beating New Zealand by 96 runs in the final.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.