இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவதில் எனக்கு எந்த அழுத்தமும் இல்லை: ஷுப்மன் கில்
இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவதில் தனக்கு எந்தவொரு அழுத்தமும் இல்லை என ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவதில் தனக்கு எந்தவொரு அழுத்தமும் இல்லை என ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 மற்றும் ஒருநாள் தொடர்கள் நிறைவடைந்துவிட்ட நிலையில், நாளை மறுநாள் (நவம்பர் 19) முதல் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெறுகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவதில் தனக்கு எந்தவொரு அழுத்தமும் இல்லை என ஷுப்மன் கில் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து விளையாட்டுத் துறையில் 100 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதை கொண்டாடும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
அந்த நிகழ்வில் அவர் பேசியதாவது: இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவதில் நான் எந்தவொரு அழுத்தத்தையும் உணரவில்லை. அணியின் முன்னாள் கேப்டன்கள் எங்களுக்காக சிறப்பான பாதையை அமைத்துக் கொடுத்துள்ளார்கள். அதில் நாங்கள் எந்தவொரு அழுத்தமுமின்றி பயணிக்கிறோம். விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் கௌதம் கம்பீர் போன்றவர்கள் கிடைத்ததற்கு நாங்கள் மிகவும் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். இவர்கள் அனைவரும் உலகம் முழுவதும் சென்று விளையாடிய அனுபவம் உடையவர்கள். இந்திய அணிக்காக இவர்கள் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்கள். அதனால், அவர்களது பரந்த அனுபவத்துக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம் என்றார்.
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான போட்டியில் இந்திய அணி நீடிக்க மிகவும் முக்கியமான தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.