FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஐசிசி செப்டம்பர் மாத சிறந்த வீரர் விருது... 5-வது முறையாக வென்று சாதனை படைத்த ஷுப்மன் கில்!

5-வது முறையாக ஐசிசி சிறந்த வீரர் விருது வென்று ஷுப்மன் கில் சாதனை படைத்துள்ளதைப் பற்றி...

13 அக்டோபர் 2026, 1:51 pm IST
ஷுப்மன் கில்.
பகிர்:

இந்திய டெஸ்ட், ஒருநாள் அணியின் கேப்டனும் நட்சத்திர வீரருமான ஷுப்மன் கில், ஐசிசி செப்டம்பர் மாதம் சிறந்த வீரருக்கான விருதை வென்றுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த ஆட்டங்களை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

அதன்படி, செப்டம்பர் மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த விளையாட்டு வீரருக்கான போட்டியில், இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ஷுப்மன் கில், அபிஷேக் ஷர்மா மற்றும் ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ரஸா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில், ஐசிசி செப்டம்பர் மாதம் சிறந்த வீரருக்கான விருதை வென்றுள்ளார். இதன் மூலம் ஐசிசி சிறந்த வீரர் விருதை ஐந்தாவது முறையாக வென்று, ஆண்கள் பிரிவில் அதிக முறை இந்த விருது வென்றவர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

27 வயதான ஷுப்மன் கில், இதற்கு முன்னதாக 2023 ஆம் ஆண்டில் ஜனவரி, செப்டம்பர் மாதங்களிலும், 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் ஜூலை மாதங்களிலும் ஐசிசி சிறந்த வீரருக்கான விருதை வென்றிருந்தார்.

கேரளத்தின் திருவனந்தபுரத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 110 ரன்கள் விளாசிய கில், அடுத்த போட்டியில் 405 ரன்கள் இலக்கை விரட்டிய போது 133 பந்துகளில் 223* ரன்கள் குவித்து மிரட்டியிருந்தார். இதனால், செப்டம்பர் மாதத்துக்கான சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய வீரர், வீராங்கனைகள் இதுவரை இரண்டு முறைக்கு மேல் ஐசிசி விருதுகளை வென்றுள்ளனர். கடந்த ஜூன் 2024-ல் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் விருதுகளை வென்றிருந்தனர். அதேபோன்று, 2025 செப்டம்பரில் அபிஷேக் ஷர்மா, ஸ்மிருதி மந்தனா இருவரும் வென்றுள்ளனர்.

summary

India captain Shubman Gill was on Tuesday named ICC men's Player of the Month for a record fifth time following his outstanding performance in the ODI series against the West Indies, while opener Shafali Verma claimed the women's honour for her impressive show in the Asia Cup and the Asian Games.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments