டெஸ்ட் தரவரிசை: டாப் 10ல் இடம்பிடித்த மூன்று இந்திய வீரர்கள்!
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் டாப் 10ல் இடம்பிடித்த இந்திய வீரர்கள் குறித்து...

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய வீரர்கள் ரிஷப் பந்த், ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் டாப் 10ல் இடம்பிடித்து அசத்தியுள்ளார்கள்.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆட்டத்தை சமனில் முடித்தது. இந்தப் போட்டியில் கே.எல். ராகுல், ஷுப்மன் கில், ரிஷப் பந்த் சிறப்பாக பேட்டிங் செய்து அசத்தினார்கள்.
கேப்டன் ஷுப்மன் கில் மூன்று இடங்கள் முன்னேறி ஏழாவது இடத்தைப் பிடித்தார். ஜெய்ஸ்வால் ஐந்து இடங்கள் முன்னேறி ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார்.
Advertisement
Advertisement
இரண்டு இன்னிங்ஸிலும் சிறப்பாக விளையாடிய நியூசிலாந்து வீரர் க்ளென் பிலிப்ஸ் 13 இடங்கள் முன்னேறி, 17ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
கே.எல். ராகுல் நான்கு இடங்கள் முன்னேறி 25ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். ஹென்றி நிகோலஸ் 10 இடங்கள் முன்னேறி 30ஆவது இடத்தையும் பிடித்துள்ளார்.
ஐசிசி பேட்டர்கள் டெஸ்ட் தரவரிசை
1. ஹாரி புரூக் (இங்கிலாந்து)
2. ஜோ ரூட் (இங்கிலாந்து)
3. டெம்பா பவுமா (தெ.ஆ.)
4. டிராவிஸ் ஹெட் (ஆஸி.)
5. ஸ்டீவ் ஸ்மித் (ஆஸி.)
6. ரிஷப் பந்த் (இந்தியா)
7. ஷுப்மன் கில் (இந்தியா)
8. ரச்சின் ரவீந்திரா (நியூசி.)
9. யஷஸ்வி ஜெய்ஸ்வால் (இந்தியா)
10. ரஹ்மத் ஷா (ஆப்கன்)