முகப்பு

முதல் ஆசிய வீரர்... விக்கெட் கீப்பர் பேட்டராக ரிஷப் பந்த் புதிய வரலாறு!

இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பந்த் நிகழ்த்திய ஆசிய சாதனை குறித்து...

20 வினாடிகள் முன்பு
முதல் ஆசிய வீரர்... விக்கெட் கீப்பர் பேட்டராக ரிஷப் பந்த் புதிய வரலாறு!
பிசிசிஐ வெளியிட்ட ரிஷப் பந்த் புகைப்படங்கள் - படங்கள்: பிசிசிஐ
பகிர்:

இந்திய வீரர் ரிஷப் பந்த் முதல் ஆசிய வீரராக விக்கெட் கீப்பர் பேட்டராக அனைத்து செனா (SENA - தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா) நாடுகளிலும் சதம் அடித்து புதிய வரலாறு படைத்துள்ளார்.

இந்தியாவிலும் ஆசிய கண்டத்திலுமே முதல் வீரராக இந்த சாதனையை நிகழ்த்தி வரலாறு படைத்துள்ளார். எம்.எஸ். தோனி, குமார் சங்ககாரா போன்ற ஜாம்பவான்களால் முடியாததை ரிஷப் பந்த் செய்து காட்டியுள்ளார்.

வெலிங்டனில் நடைபெற்றுவரும் முதல் டெஸ்ட்டில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் நான்காம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

Advertisement

Advertisement

இதில் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 368 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, இந்தியா 720/9 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இந்தப் போட்டியில் ரிஷப் பந்த் 128 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதில் 10 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் அடித்தார்.

இந்த சதத்துடன் அனைத்து செனா நாடுகளிலும் சதம் அடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பராக சாதனை படைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சிக்ஸருடன் 4 முறை சதம் அடித்தவர் என்று சாதனையில் இரண்டாமிடம் பிடித்துள்ளார்.

பிசிசிஐ சிறப்புப் போஸ்டரை வெளியிட்டு ரிஷப் பந்த்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது. இந்திய ரசிகர்களும் இணையத்தில் பாராட்டி வருகிறார்கள்.

நியூசிலாந்து அணி நான்காம் நாள் முடிவில் 119/2 ரன்கள் எடுத்து, இந்தியாவைவிட 233 ரன்கள் பின்னிலையில் இருக்கிறது. இந்தியா வெற்றி பெற 8 விக்கெட்டுகள் தேவையாக இருக்கிறது.

summary

Rishabh Pant becomes the First Asian WK to score Test Hundreds in all SENA countries in History

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.