வெலிங்டன் டெஸ்ட்: கே.எல். ராகுல், ஷுப்மன் கில் அசத்தலால் இந்தியா 486 ரன்கள் குவிப்பு!
இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட்டின் மூன்றாம் நாள் ஆட்டம் குறித்து...

வெலிங்டனில் நடைபெறும் இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட்டின் மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
தொடக்கத்தில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 368 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது.
மூன்றாம் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 486/4 ரன்கள் குவித்துள்ளது. இதில் தொடக்க வீரர் கே.எல். ராகுல் 136 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
Advertisement
Advertisement
கேப்டன் ஷுப்மன் கில் 98 ரன்களிலும் தேவ்தத் படிக்கல் 80 ரன்களிலும் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார்கள். ஆட்ட நேர முடிவில் களத்தில் ரிஷப் பந்த் 55, அன்ஷுல் கம்போஜ் விளையாடி வந்தார்கள்.
தற்போது, இந்திய அணி 118 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. இன்னும் இரண்டு நாள்கள் மீதமுள்ள நிலையில் இந்திய அணி 300க்கும் அதிகமான ரன்கள் குவித்து டிக்ளேர் செய்து, நியூசிலாந்தை வீழ்த்த திட்டமிடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக இந்தியாவை சொந்த மண்ணில் 0-3 என நியூசிலாந்து தொடரை வீழ்த்தியிருந்தது. இதற்குப் பழிவாங்கும் வாய்ப்பு தற்போது இந்தியாவுக்கு அமைந்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.