வெலிங்டன் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இந்தியா ஆதிக்கம்! நியூசி. பந்துவீச்சாளர்கள் திணறல்!
வெலிங்டன் டெஸ்ட்டின் இரண்டாம் நாள் ஸ்கோர் விவரங்கள்...
இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவில், முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து இந்தியா 159 ரன்கள் எடுத்துள்ளது.
நியூசிலாந்து பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. வெலிங்டனில் நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட்டில் இந்திய அணி டாஸ் வென்று, பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 243 ரன்களை நியூசிலாந்து அணி குவித்திருந்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்ற நிலையில், முதல் இன்னிங்ஸில் தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 368 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
நியூசிலாந்து அணிக்காக அதிகபட்சமாக ஹென்றி நிகோலஸ் 175 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் விளையாடினார். க்ளென் பிலிப்ஸ் 118 ரன்களுக்கு அவுட்டானார்.
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 4 விகெட்டுகளையும், ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் ஜோடி வலுவான தொடக்கம் கொடுத்தனர்.
இந்திய அணி 130 ரன்கள் குவித்திருந்தபோது, ஜெய்ஸ்வால் 85 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி ஒரு விக்கெட்டை இழந்து 159 ரன்கள் எடுத்து வலுவாக உள்ளது.
கே.எல். ராகுல் 52 ரன்களுடனும், படிக்கல் 16 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 209 ரன்கள் பின்தங்கியுள்ளது.