மனைவியின் அறிவுரையின்படி... பிறந்த நாளில் பதிவிட்ட சஞ்சு சாம்சன்!
இந்திய டி20 கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் பகிர்ந்த இன்ஸ்டாகிராம் பதிவு குறித்து...
இந்திய டி20 கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் தனது பிறந்த நாளில் மனைவியின் அறிவுரையின்படி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
கேரளத்தைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் இந்திய டி20 அணி 2026 உலகக் கோப்பை வெல்வதற்கு முக்கியமான காரணமாக அமைந்திருந்தார். தொடர் நாயகன் விருது வென்று அசத்தினார்.
Advertisement
Advertisement
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் விளையாடி வருகிறார். சிஎஸ்கே நிர்வாகம் அவருக்கு 11:11 சேட்டனுக்கு வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளது.
இன்ஸ்டாவில் குறைவாக புகைப்படங்களைப் பதிவிடும் சஞ்சு சாம்சன் தனது மனைவியின் அறிவுரையினால் பிறந்த நாளில் பதிவிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
சுய கொண்டாட்டம் முக்கியம் என யாரோ ஒருவர் (சாருலதா ரமேஷ்) எனக்குக் கூறியிருந்தார். அதனால், இன்று 11/11 எனது பிறந்த நாளில் எனக்குப் பிடித்த புகைப்படத்தைப் பகிர்ந்து, நானே கொண்டாடுகிறேன்.
என்னை வாழ்த்தி அனுப்பிய குறுஞ்செய்திகளுக்கும் அன்புக்கும் நன்றிகள். ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன் எனக் கூறியுள்ளார்.
சிஎஸ்கே அணியின் மூத்த வீரராக இருக்கும் சஞ்சு சாம்சன் விரைவில் கேப்டனாக செயல்படுவாரா என்ற எதிர்பார்ப்பு சிஎஸ்கே ரசிகர்களிடம் இருக்கிறது.