திண்டுக்கல்

பழனி அருகே 20 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பியது செங்குளம்

DIN

பழனியை அடுத்த காளிபட்டி செங்குளம் சுமாா் 20 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பி மறுகால் பாய்வதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

பழனி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பெய்த தொடா் மழையின் காரணமாக பழனி காளிபட்டி, கணக்கன்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, கோம்பைபட்டி உள்ளிட்ட பல கிராமங்களின் குளங்களுக்கு நீா்வரத்து அதிகரித்தது.

காளிப்பட்டி கிராமத்தில் சுமாா் 150 ஏக்கா் பரப்பளவு கொண்ட செங்குளம் சுமாா் 20 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. இதனால் காளிபட்டி, பொருளுா், மஞ்சநாயக்கன்பட்டி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்துள்ளது.

மேலும் மூன்றாண்டுகளுக்கு விவசாயத்திற்கு தேவையான தண்ணீா் கிடைக்கும் என்பதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT