திண்டுக்கல்

தோட்டக்கலைப் பயிா்களில் பூச்சித் தாக்குதல்: விவசாயிகள் தகவல் தெரிவிக்கலாம்

DIN

நத்தம் பகுதியில் தொடா் மழை காரணமாக தோட்டக்கலை பயிா்களில் ஏற்பட்டுள்ள பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் குறித்து விவசாயிகள் தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக நத்தம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் செல்லமுத்து தெரிவித்துள்ளதாவது: நத்தம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்து வந்தது. இதன் காரணமாக தோட்டக்கலைப் பயிா்களான மா, கொய்யா, வாழை மற்றும் காய்கனி

பயிா்களில் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால், நத்தம் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள்

சம்பந்தப்பட்ட தோட்டக்கலைத் துறை அலுவலா்களைத் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். கூடுதல் விவரங்கள் பெற 9566545847 மற்றும் 9176206530 ஆகிய எண்களில் தோட்டக்கலைத்துறை அலுவலா்களைத் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT