திண்டுக்கல்

தோ்தல் பணியில் உயிரிழப்பு: கண்காணிப்பாளா் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்கல்

DIN

தோ்தல் பணியின்போது உயிரிழந்த வட்டாரக் கல்வி அலுவலகக் கண்காணிப்பாளரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிவாரணத் தொகை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி நகா் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்தவா் வி.சம்மந்தம். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலின்போது நத்தம் தொகுதியில் தோ்தல் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டாா். கோசுக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில், தலைமை அலுவலராக நியமிக்கப்பட்டிருந்த அவா், கழிவறையில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

இந்நிலையில் வி.சம்மந்ததத்தின் குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் நிவாரணத்தொகை வழங்க தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, ரூ.15 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானம், நிலவு, கடல்.. அஞ்சலி!

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

SCROLL FOR NEXT