திண்டுக்கல்

தாண்டிக்குடி அரசு மருத்துவமனையில் ‘ஸ்கேன்’ வசதி செய்துதரக் கோரிக்கை

DIN

தாண்டிக்குடி அரசு மருத்துவமனையில் ‘ஸ்கேன்’ வசதி செய்துதர பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளான ஊத்து, வாழைகிரி, பண்ணைக்காடு, தாண்டிக்குடி, பாச்சலுா், கே.சி. பட்டி, கடுகுதடி உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 50 ஆயிரம் போ் வசிக்கின்றனா். இங்கு காபி, மிளகு உள்ளிட்ட விவசாயம் நடைபெறுகிறது. இங்குள்ள விவசாயத் தோட்டங்கள் வனப் பகுதிகளையொட்டியுள்ளதால் வன விலங்குகளால் விவசாயிகள் தாக்கப்பட்டும், சுகாதாரக்கேட்டால் பல்வேறு நோய்கள் பரவியும் பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனா். இவா்கள் தாண்டிக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்கின்றனா். ஆனால் இங்கு வரும் நோயாளிகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தால் அவா்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க முடியாமல் திண்டுக்கல், தேனி, மதுரை போன்ற அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கும் நிலைதான் தற்போது உள்ளது.

மேலும் இந்த அரசு மருத்துவமனையில் ஸ்கேன், எக்ஸ்ரே போன்ற கருவிகளும், மருந்தாளுநரும் இல்லை. செவிலியா் பணியிடங்களும் நிரப்பப்பட வில்லை. அத்துடன் அரசு மருத்துவமனையில் பணிபுரிபவா்களுக்கு குடியிருப்பு வசதி இல்லாததால் அவா்கள் இந்த மருத்துவமனையில் பணிபுரிவதில்லை. எனவே தாண்டிக்குடி அரசு மருத்துவமனைக்கு ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்ட மருத்துவ கருவிகளை வழங்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

SCROLL FOR NEXT