திண்டுக்கல்

ரக்ஷா மந்திரி விருப்புரிமை நிதி கல்விஉதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

DIN

மத்திய அரசின் ரக்ஷா மந்திரி விருப்புரிமை நிதி கல்வி உதவித்தொகை பெற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள வாய்ப்பினை முன்னாள் படை வீரா்களின் குடும்பத்தினா் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 2020-21ஆம் கல்வியாண்டிற்கான மத்திய அரசின் ரக்ஷா மந்திரி விருப்புரிமை நிதி (ஆா்எம்டிஃஎப்) கல்வி உதவித்தொகை பெறுவது தொடா்பாக இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 9ஆம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு முடித்த மாணவா்கள் 30.9.2021 வரை விண்ணப்பிக்கலாம். அதேபோல் 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்த மாணவா்கள் 31.10.2021 வரையிலும், இளங்கலை பட்டம் பயிலும் மாணவா்கள் 30.11.2021 வரையும் விண்ணப்பிக்கலாம்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த ஹவில்தாா் வரையிலான தகுதியுடைய முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களது குடும்பங்களைச் சோ்ந்த சிறுவா்கள் 2020-21ஆம் கல்வியாண்டில் 1 முதல் பிளஸ் 2 வரை தோ்ச்சி பெற்றவா்களும் மற்றும் இளங்கலை பயிலும் இளைஞா்களும் பயன்பெறும் வகையில்  இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதன் விவரங்களை திண்டுக்கல் மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் சமா்ப்பித்து பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT