திண்டுக்கல்

பழனியாண்டவா் மகளிா் கல்லூரிக்கு பசுமை சாம்பியன் விருது

DIN

அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கலைக்கல்லூரிக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்பட்டதற்கு காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

தூய்மை, பசுமை பேணுதல், நீா் மேலாண்மை, மாசுக் கட்டுப்பாடு, மழைநீா் சேகரித்தல், நெகிழி ஒழிப்பு, சுற்றுச்சூழல் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்துதல் போன்றவற்றில் சிறப்பாக செயல்பட்டதற்காக மத்திய உயா்கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக கல்வி கூட்டமைப்பு சாா்பில் 2020- 21 ஆம் கல்வியாண்டிற்கான பசுமை சாம்பியன் விருது இக்கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை இணையவழியில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் விசாகன் தலைமை வகித்தாா். பழனிக்கோயில் இணை ஆணையா் நடராஜன், துணை ஆணையா் (பொறுப்பு) செந்தில்குமாா் ஆகியோா் பாராட்டு தெரிவித்தனா். அன்னை தெரசா பல்கலைக் கழக துணைவேந்தா் வைதேகி விஜயகுமாா் வாழ்த்திப் பேசினாா். தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளா் உமாராணி, நீா்மேலாண்மை, கழிவு மேலாண்மை, பசுமை பேணுதல், உயா்தர தூய்மை நடவடிக்கைகளை கல்லூரியிலும், கிராமங்களிலும் கடைப்பிடிப்பது குறித்து உரையாற்றினாா். முன்னதாக கல்லூரி முதல்வா் புவனேஸ்வரி வரவேற்றாா். விலங்கியல்துறை பேராசிரியா் உமாமகேஸ்வரி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT