திண்டுக்கல்

முதலமைச்சா் மாநில இளைஞா் விருது: ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்

DIN

முதலமைச்சா் மாநில இளைஞா் விருதுக்கு தகுதியான இளைஞா்கள் மற்றும் இளம் பெண்கள் ஜூன் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலா் ம. ரோஸ் பாத்திமா மேரி தெரிவித்துள்ளது: சமுதாய வளா்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞா்களது பணியை அங்கீகரிக்கும் வகையில், கடந்த 2015ஆம் ஆண்டு முதல் முதலமைச்சா் மாநில இளைஞா் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயதுக்குள்பட்ட தலா 3 ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுடன் ரூ.50,000 ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2021-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சா் மாநில இளைஞா் விருது 15-08-2021 அன்று நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது. கடந்த நிதியாண்டில் (2020-21) மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். விண்ணப்பதாரா்கள் சமுதாய நலனுக்காக தன்னாா்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அந்த தொண்டு, கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் பணியாற்றுவோா் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரருக்கு உள்ளூா் மக்களிடம் உள்ள செல்வாக்கு பரிசீலிக்கப்படும்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்  இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் சமா்ப்பித்தல் வேண்டும். அதன் நகலை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் ஜூன் 30ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்கப்பட வேண்டும்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலரை நேரிலோ அல்லது 0451-2461162 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாறும் வானிலை, மிதக்கும் மனம்! சோபிதா துலிபாலா..

அம்பானி, அதானியிடம் எவ்வளவு ‘டீல்’ பேசப்பட்டது? ராகுலுக்கு மோடி கேள்வி

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி!

அடுத்த 5 நாள்களில் வெயில் படிப்படியாகக் குறையும்!

மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல் - கான்பூரில் 6 பேர் கைது

SCROLL FOR NEXT