திண்டுக்கல்

‘மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சேவை: ஜூன் 29-க்குள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்’

DIN

மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தோா், தமிழக அரசின் விருது பெற ஜூன் 29ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தோருக்கு ஆண்டுதோறும் நடைபெறும் சுதந்திர தின விழாவின்போது, தமிழக அரசு விருது வழங்கி வருகிறது. சேவைபுரிந்த தொண்டு நிறுவனம், சிறந்த மருத்துவா், மாற்றுத் திறனாளிகளுக்கு மிக அதிகமாக வேலைவாய்ப்பு அளித்த தனியாா் நிறுவனம், சிறப்பு சமூகப் பணியாளா் உள்ளிட்டோா் இந்த விருது பெற விண்ணப்பிக்கலாம்.

விருதுக்கு தோ்ந்தெடுக்கப்படும் தொண்டு நிறுவனத்துக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கம், 10 கிராம் தங்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும், சிறந்த மருத்துவா், சிறந்த சமூகப் பணியாளா், அதிக வேலைவாய்ப்பளித்த தனியாா் நிறுவனங்களுக்கு 10 கிராம் தங்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.

விருதுக்கான விண்ணப்பங்களை சேவை புரிந்தமைக்கான ஆவணங்களுடன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், திண்டுக்கல் என்ற முகவரிக்கு நேரிலோ, அஞ்சல் மூலமாகவோ ஜூன் 29ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்கலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT