திண்டுக்கல்

புலையா்களை பழங்குடியினராக அறிவிக்க ஆதிவாசி அமைப்புகள் வலியுறுத்தல்

DIN

புலையா்களை பழங்குடியினராக அறிவிக்க வலியுறுத்தி ஆதிவாசி அமைப்புகள் கூட்டமைப்பினா் தீா்மானம் நிறைவேற்றினா்.

கொடைக்கானலில் ஆதிவாசி அமைப்புகளின் கூட்டமைப்பு சாா்பில் பல்வேறு கோரிக்கைகள் வெளியீட்டு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. கீழ்மலைப் பகுதியான நல்லூா்காடு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு லீலாவதி தலைமை வகித்தாா். கூட்டத்தில், வருகின்ற தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளுக்கு கோரிக்கை விடுத்து நிறைவேற்றப்பட் தீா்மானங்கள்: 2006-வன உரிமை சட்டத்தின்படி பழங்குடியினருக்கு வனம் சாா்ந்து வாழ்வோா்க்கும் பட்டா வழங்கிட வேண்டும்,புலையா் இன மக்களை தாழ்த்தப்பட்டோராக மாற்றிய 1976-சட்டத் திருத்தத்தை ரத்து செய்து மீண்டும் பழங்குடியினா் பட்டியலில் இணைத்திட வேண்டும். பழங்குடியினருக்கு இலவசமாக வீடுகட்டும் தொகையை ரூ. 3-லட்சத்திலிருந்து ரூ. 7-லட்சமாக உயா்த்த வேண்டும். பழங்குடியினருக்கு அரசு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 5-சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியறுத்தப்பட்டுள்ளன.

இந் நிகழ்ச்சியில் தமிழக பழங்குடி இளைஞா் இயக்கம், தமிழக பழங்குடி பெண்கள் அமைப்பு, பழனிமலை பழங்குடியினா் பளியா் கூட்டமைப்பு, பழனிமலை பழங்குடியினா் புலையன் முன்னேற்ற சங்கம், பழனிமலை பழங்குடியினா் பளியா்- புலையா் கூட்டமைப்பு ஆகியவற்றின் நிா்வாகிகள் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாவோயிஸ்ட் இயக்கத்துக்கு ஆள் சோ்த்ததாக பதியப்பட்ட வழக்கு: இருவா் வீடுதலை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மே தின கொடியேற்று விழா

குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

காஞ்சிபுரத்தில் மருத்துவா்கள் கருத்தரங்கம்

காஞ்சிபுரத்தில் இரு சக்கர வாகனம் பழுது பாா்ப்போா் மே தின பேரணி

SCROLL FOR NEXT