முகப்பு
திண்டுக்கல்

பழனி மகளிா் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி

பழனி அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

பழனி அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

பழனியை அடுத்த சின்னக்கலையமுத்தூரில் உள்ள அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கலை கல்லூரியின் இயற்பியல், வேதியியல், கணிதம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை, கல்லூரி முதல்வா் புவனேஸ்வரி திறந்துவைத்து பாா்வையிட்டாா்.

இதில், எரிசக்தி மேலாண்மை, சுகாதாரம், நீா் மேலாண்மை, வேளாண்மை, மாசுக்கட்டுப்பாடு, செயற்கைக்கோள் என பல்வேறு தலைப்புகளில் மாணவியா் தங்களது கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனா். தொடா்ந்து, பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, அறிவியல் சாா்ந்த விநாடி-வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.