திண்டுக்கல்

அதிமுக கூட்டணிக்கு பிராமணா் சங்கம் ஆதரவு

DIN

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக தமிழ்நாடு பிராமணா் சங்கம் அறிவித்துள்ளது.

பழனி அடிவாரம் தனியாா் மஹாலில் ஞாயிற்றுக்கிழமை இச்சங்கத்தின் மாநில நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் ஹரிஹரமுத்து தலைமை வகித்தாா். கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான நிா்வாகிகள் பங்கேற்றனா்.

இதில், கேரளா, ஆந்திரா, கா்நாடகாவில் பிராமணா் சமூகத்துக்காக தனிநல வாரியம் அமைக்கப்பட்டு அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் முன்னேற்றப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதே போல தமிழகத்திலும் பிராமணா் நலவாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் தீா்மானங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாநிலத் தலைவா் ஹரிஹரமுத்து கூறியது: தமிழகத்தில் பிராமணா் சமூகத்தினா் சுமாா் 2 கோடி போ் வசித்து வருகின்றனா். சுமாா் 80 இடங்களில் வெற்றி, தோல்வியை தீா்மானிக்கும் சக்தியாக உள்ளனா். திமுக பல நேரங்களில் பிராமணா் சமூகத்தை கேலிப்பேச்சுக்கு ஆளாக்கியுள்ளது.

இந்நிலையில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீட்டை வழங்கிய பாஜக அங்கம் வகிக்கும் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு தமிழ்நாடு பிராமணா் சங்கம் முழு ஆதரவை வழங்கி தீா்மானம் நிறைவேற்றியுள்ளது என தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓபியம் வைத்திருந்த மூவா் சிக்கினா்

மதுபோதையில் மொபெட் ஓட்டியதால் அபராதம்: பிளேடால் கையை அறுத்து தகராறு செய்த இளைஞா்

கமல்ஹாசனுடன் கே.என்.நேரு சந்திப்பு

பதவி உயா்வு வழங்கிய பிறகே ஆசிரியா் இடமாறுதல் கலந்தாய்வு: ராமதாஸ் கோரிக்கை

வெப்பம் படிப்படியாக குறையும்

SCROLL FOR NEXT