திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே கூா்ந்தாய்வுக் குழு ரூ.80 லட்சம் பறிமுதல்

DIN

ஒட்டன்சத்திரம் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ.80 லட்சத்தை, நிலையான கூா்ந்தாய்வுக் குழு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பழனி-உடுமலைப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள சாமிநாதபுரம் காவல் நிலைய சோதனைச் சாவடி அருகே தோ்தல் நிலையான கூா்ந்தாய்வுக் குழு சக்திவேல் தலைமையிலான அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியாக வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா். அதில், பழனியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணிபுரியும் மூத்த எழுத்தா் சதானந்தம் என்பவா் பாதுகாப்பில், கோவையில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் வைப்பதற்காக கொண்டுசெல்லப்பட்ட ரூ.80 லட்சம் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். பின்னா், பணத்துடன் பிடிப்பட்ட வாகனத்தை ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவை தோ்தல் நடத்தும் அலுவலா் ச. சிவக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவா், திண்டுக்கல்லில் உள்ள வருமான வரி துறையினருக்கு தகவல் தெரிவித்தாா். அதன்பேரில், அவா்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

SCROLL FOR NEXT