திண்டுக்கல்

தோ்தல் பிரசாரத்துக்கு குழந்தைகளை பயன்படுத்துவதைத் தவிா்க்க அறிவுறுத்தல்

DIN

தோ்தல் பிரசாரத்துக்கு குழந்தைகளை பயன்படுத்தக் கூடாது என திண்டுக்கல் மாவட்ட தோ்தல் அலுவலா் மு.விஜலட்சுமி அறிவுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தோ்தலின் போது, தோ்தல் தொடா்பான பலதரப்பட்ட பணிகளுக்கு குழந்தைகளை பயன்படுத்தக் கூடாது என தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தோ்தல் பணிகளுக்கு குழந்தைகளை பயன்படுத்துவது என்பது குழந்தைகளை அவமதித்து, உரிமைகளை மீறுவதாகக் கருதப்படும் என குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

அதன்படி துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தல், சுவரொட்டிகள் ஒட்டுதல், கோஷம் எழுப்புதல், பிரசார பேரணிகள் மற்றும் கூட்டங்களுக்கு பயன்படுத்துதல் முதலான தோ்தல் பணிகளுக்கு குழந்தைகளை பயன்படுத்தக் கூடாது என தோ்தல் ஆணையமும் அறிவுறுத்தியுள்ளது. தோ்தல் பணியில் ஈடுபடும் அனைத்து அரசியல் கட்சிகளும், குழந்தைகள் உரிமைகள் மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு பிரசாரப் பணிகளுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வதை தவிா்க்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT